மின் உற்பத்தி

மின் உற்பத்தி

நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநில, மத்திய மற்றும் தனியார் மின் உற்பத்தி திட்டங்களுடன் 13,231.44 மெகாவாட் மின் நிறுவு திறனை பெற்றுள்ளது.

இவைத் தவிர, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் சேர்த்து 8470.16 மெகாவாட் மின் நிறுவு திறன் அமைந்துள்ளது.    

எதிர்கால மின் உற்பத்தி திட்டங்கள்

மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்ந்து வரும் இடைவெளியை குறைக்கவும், அதிகரித்துவரும் மின் தேவையை பூர்த்தி செய்யவும்,புதிய மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழகத்தில் 10வது ஐந்தாண்டு திட்டத்திலேயே நீர் மூலம் மின் சக்தி பெறுவதற்கான மின் நிலையங்கள் முழுவதுமாக நிறுவப்பட்டுவிட்டன. இருப்பினும் உச்சநேர மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1200 மெகாவாட் திறன் கொண்ட 3 நீரேற்று புனல் மின் நிலையங்கள் குந்தா, மேட்டூர் மற்றும் வெள்ளிமலையில் நிறுவப்பட உள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே சிறு புனல் மின் திட்டத்தின்¢கீழ் (25 மெகாவாட்டுக்கு கீழ்) சுமார் 110 மெகாவாட் திறன் கொண்ட சிறுபுனல் மின்நிலையங்கள் நிறுவப்பட உள்ளன.

சுற்றுச்சூழல் குறித்த அக்கறை

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நிலையங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசினை தவிர்ப்பதற்கான அவசியத்தையும் தனது சமூக பொறுப்பையும் முற்றிலும் உணர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மின்வாரியம்சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகளை எல்லா மின் திட்டங்களின் தொடக்க நிலையிலிருந்து செயலாக்கம் வரையிலும் மற்றும் மின்நிலையங்களின் தினசரி இயக்கத்திலும் ஒருங்கிணைந்து கையாளுவதில் எவ்வித தொய்வுமின்றி மிகவும் முனைப்பாக உள்ளது. மேலும் ...