முகப்பு    

எங்களைப் பற்றி

நுகர்வோர் சேவைகள்

மின் கட்டண சேவைகள்

கொள்முதல்    

மனிதவளமும் ஆராய்ச்சியும்

தொடர்பு கொள்ள

இணையதள அடக்கம்

  ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவிலுள்ள சோதனை வசதிகள்

                                                         சோதனை கட்டண விபரங்கள்

மின்மாற்றி எண்ணெய் சோதனைகள்

    

அ) கரைந்த வளிமப் பகுப்பாய்வு சோதனை:

                 மின்மாற்றியில் உள்ள எண்ணையில் கரைந்துள்ள வளிமங்களை கண்டறிந்து,அளவிட்டு,அவற்றின் மூலம் மின்மாற்றியில் நிகழக்கூடிய பழுதினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது.

உபகரணம்   : ஹெட்ஸ்பேஸ் ஆட்டோ சாம்பிளருடன் கூடிய வளிம நிறப்பிரிப்பு கருவி

உருவாக்கம்  : பெர்கின் எல்பர்/அமெரிக்கா  

ஆ)  பியூரான் பகுப்பாய்வு சோதனை:

 

                மின்மாற்றியில் திண்ம நிலையிலுள்ள காப்புகளின் தன்மையை மின்மாற்றி எண்ணெயில் கரைந்துள்ள பியூரான்களின் அளவினை கணக்கிட்டு அதன் மூலம் அறிதல்

உபகரணம்:  எச்.பி.எல்.சி. சோதனை கருவி

(உருவாக்கம்: வாட்டர்சு இந்தியா, பெங்களுரு)

 

இ)  நீர் இருப்பு சோதனை:

                மின்மாற்றி எண்ணெயில் இருக்கும் நீரின் அளவினை கண்டுபிடித்தல்.

உபகரணம: தானியங்கி அளவறி பகுப்பாய்வு கருவி

உருவாக்கம்: மெட்ரோம், சுவிட்சர்லாந்து

 

ஈ) தடைமை மற்றும் டேன் டெல்ட்டா சோதனை:

                மின்மாற்றி எண்ணெயில் தடைமை மற்றும் டேன் டெல்ட்டாவின் அளவை சோதனை செய்தல்.

உபகரணம்: தானியியங்கி தடைமை மற்றும் டேன்டெல்ட்டா சோதனை கருவி

உருவாக்கம்: எல்டெல், பெங்களுரு

 

உ)  அமிலத்தன்மை சோதனை:

                மின்மாற்றி எண்ணெயில் உள்ள அமிலத்தன்மையை அறிதல்.

உபகரணம்: அமிலத்தன்மை நடுநிலையாக்கல் தகுதி கருவி

உருவாக்கம்:  சுபெக்ட்ரா லேப், தானே.

 

ஊ)  முறிவு மின் அழுத்த சோதனை:

                மின்மாற்றி எண்ணெயில் மின் அழுத்த முறிவு அறிதல்.

உபகரணம்:  தானியங்கி முறிவு மின் அழுத்த சோதனை கருவி

உருவாக்கம்:  மெக்கர், இங்கிலாந்து.

 

எ)  தீப்பற்று நிலை சோதனை:

                மின்மாற்றி எண்ணெய் எந்த வெப்பநிலையில் தீப்பற்றும் என்பதை கண்டறிதல்.

உபகரணம்:  தானியங்கி தீப்பற்று நிலை அறியும் கருவி

உருவாக்கம்: சுகெவினி பென்ச்க்கி மார்டன்சு, இத்தாலி

 

ஏ)  இடைமுக இழுவை சோதனை:

                மின்மாற்றி எண்ணெய் எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதை இடைமுக இழுவை சோதனை மூலம் அறிதல்.

உபகரணம்:  தானியங்கி இடைமுக இழுவை கருவி

உருவாக்கம்:  க்ருசு, செருமனி

 

ஐ)  கசடு இருப்பு சோதனை:

                மின்மாற்றி எண்ணெயில் கசடு இருக்கின்றதா, இல்லையா என்பதை சோதனை செய்தல்.

 

                        உயர்மின் அழுத்த சோதனைகள் 

 

அ)  டேன் டெல்ட்டா மற்றும் மின்தேக்கம்

10 கி.வொ மின்னழுத்தம் மின்மாற்றி, மின்னோட்ட மாற்றி கொண்ட மின்னழுத்த மாற்றிகளின் டேன் டெல்டா மற்றும் மின் தேக்கம் பகுப்பாய்வு செய்தல்.

உருவாக்கம்: டோபுல், அமெரிக்கா

உருவாக்கம்:  எல்டெல், பெங்களுரு.

ஆ)  கிளர்வு மின்னோட்டம்

10 கி.வொ. மின்னழுத்தம் மின்மாற்றி, மின்னோட்ட மாற்றி கொண்ட மின்னழுத்த மாற்றிகளின் கிளர்வு மின்னோட்டம் பகுப்பாய்வு செய்தல்.

உருவாக்கம்: டோபுல், அமெரிக்கா

இ)  சுற்று விகிதம்

10 கி.வொ. மின்னழுத்தம் மின்மாற்றி, மின்னோட்ட மாற்றி கொண்ட மின்னழுத்த மாற்றிகளின் சுற்று விகிதம் பகுப்பாய்வு செய்தல்.

உருவாக்கம்:  டோபுல், அமெரிக்கா

ஈ)  மின்மாற்றி விழுக்காடு

மின்னழுத்தம் மின்மாற்றி, மின்னோட்ட மாற்றி கொண்ட மின்னழுத்த மாற்றிகளின் மின்மறிப்பு விழுக்காடு பகுப்பாய்வு செய்தல்.

உருவாக்கம்:  டொபுல், அமெரிக்கா

உ)  உயர்மின் அழுத்த மின்னால் கடத்தியின் கசிவு மின்னோட்டத்தை அளவிடடு அறிதல்.

உருவாக்கம்:  1) 60 கி.வோ மின்மாற்றி - ஆசியா, சுவீடன்

                  2) பல்வகை அளவி   - ரிசப், இந்தியா

                  3) மின்னழுத்த மாற்றி - ஏ.யி, இந்தியா

)  5 கே.வி இலக்கமுறை காப்பு கருவி

உயர் மின் அழுத்த சாதனங்களின் காப்பு நிலைமையை அறிதல்.

உருவாக்கம்:  மெக்கர், இங்கிலாந்து

) கிளையலை பகுப்பாய்வு 

உயர் மற்றும் குறைந்த மின் அழுத்தபாதையில் உள்ள கிளையலைகளை அளவிடப்படுகிறது.

உருவாக்கம் :   டிரானட்ஸ்,அமெரிக்கா

உருபடிவம் :  பவர்விசா

மின் இணை நிலக் காப்புத்தடை அளவி
மண்தடைமை மற்றும் துணை மின்நிலையத்தில் நில இணைப்பை சோதனை செய்தல்

குறிப்பு: மேற்கண்ட சோதனை வசதிகளை பிறதுறைகளும்,தனியாரும் உரிய சோதனைக்க கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்,

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் தொலைபேசி எண்கள்

செயற் பொறியாளர்,

ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கூடம், சென்னை

044 - 28520131 Extn - 2402

ஆராய்ச்சிக்கூடம், சென்னை

044 - 28520131 Extn - 2454,2435

044 - 28414912

ஆராய்ச்சிக்கூடம், கோவை

0422- 2493262                    

 

   
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்